Tuesday, October 16, 2012

ஒரு போகத்துக்கு ஏழு சாலு உழவு !
கோடை மழைக்கு ரெண்டுசாலு !

காணிக்கு இருபது வண்டி எருதள்ளி !
மடக்கு உழவு இரு சாலு ! 

"புல்லு மடக்க" இரு சாலு !
வெதப்புக்கு ஒரு சாலு ! ஆக,

காணிக்கு ஏழு சாலும் சேர்த்து ,
நடந்தது எழுபது மயிலு !

மறுநா மழைக்கு காத்திருக்கேன் !
வெதப்போட போயிடுமா ?

மானம்பாத்து காத்திருக்கேன் !
மழை வருமான்னு "மானத்தோட" !


2 comments:

  1. அன்புள்ள நண்பருக்கு ,
    இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூ கண்டேன் .மிகவும் மகிழ்வு .உங்களை நான் தொடர்கிறேன் follower ஆக
    அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை .வாழ்த்துகள் . உங்களைப் பற்றி அறிய மிகவும் ஆவல் . follower கேட்ஜெட் சேருங்கள் .மக்கள் பயனடைவார்கள் ,சில கட்டுரைகளை நான் போட்டு உங்களுக்கு லிங்க் கொடுக்கிறேன் .நன்றி அன்புடன் NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்

    ReplyDelete
  2. Please prove you're not a robot
    please remove it. .not able to comment. To publish you can approve that

    ReplyDelete